சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்கள் நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் தான் என நிரூபித்துள்ளார். நடிகை பிரியாபவானி ஷங்கர். 

இன்ஜினியரிங் படித்து விட்டு, திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக பிரபல நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், அறிமுகமான முதல் திரைப்படமான 'மேயாத மான்' இவருக்கு சிறந்த நாயகி என்கிற பெயரை எடுத்து கொடுத்தது மட்டும் இன்றி, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் செம ஹிட்.

இந்நிலையில் இவர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கும் இந்த படத்தில் ,எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் பிரியாபவானி, இப்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் வெள்ளை நிறத்தில் பாய் போல் விரிந்திருக்கும் பணியில் குழந்தை போல் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.