சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, கதாநாயகியாக ஜெயித்தவர்கள் என்று பார்த்தல் மிக சிலர் தான். அந்த வகையில் சீரியல் நடிகையாக இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறி, தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மான்ஸ்டர்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில், இவரை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக 'இந்தியன் 2 ' படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.  இப்படம் இரண்டு வருடமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் துவங்க உள்ளது.  

இப்படத்தில் தற்போது பிரியா பவானி ஷங்கரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து நடிகைகளுக்கும் தலை சிறந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அவேண்டும் என்கிற ஒரு ஆசை இருக்கும். அந்த வாய்ப்பு பிரியா பவானிக்கு குறுகிய காலத்திலேயே கிடைத்துள்ளது இவருக்கு நடித்துள்ள ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுதுகிறது.