priyabavani acting lead character for sj suriya

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து... கதாநாயகியாக நடித்து கலக்கி வருபவர் நடிகை பிரியபவானி. இவர் தமிழில் நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர், நடிகர் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளிவந்தது.

தற்போது, இவர் அஜித்தை வைத்து வாலி, விஜயை வைத்து குஷி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவரும் பல படங்களில் நாயகனாகக் கலக்கிவருபவருமான எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை, ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்கவுள்ளார். மெர்சல் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.