கடந்த வாரம் சோஷியல் மீடியாக்கலையே கலக்கிய ஒரு வீடியோ என்றால் அது நடிகை பிரியா வாரியார் கண் சிமிட்டல் வீடியோ தான். இதன் மூலம் ஒரே நாளில் ஊரே அறிந்துக்கொண்ட பிரபலமாக மாறினார் பிரியா வாரியர். 

இவர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்து ஒரு சில சர்ச்சைகளும் எழுந்தது. இதன் காரணமாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிரியா வாரியார் மீது இருந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நேற்று கொச்சியில் நடைப்பெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியர் மற்றும் அவருடன் போட்டியாக புருவம் உயர்த்திய நடிகர் ரோஷனும் கலந்துக்கொண்டனர்.

இந்த போட்டியை காண கிரிகெட் வீரர் சச்சின் டெல்டுல்கர் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர் மற்றும் ரோஷன் இருவரும் தங்களது கேரளா அணியின் ஜெர்சியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.