'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் இப்போது நடைப்பெற்று  வரும் திரையுலகினர் வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் ஓரிரு வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், சூர்யா அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் கேவிக் யூரே ஒளிப்பதிவாளராகவும்  ஆன்டனி எடிட்டராகவும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க 'புருவ அழகி' பிரியா வாரியரிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம் படக்குழுவினர்.  ஏற்கனவே பிரியா வாரியார் நடித்து முடித்துள்ள ' ஒரு ஆடார் லவ்' படமே இன்னும் வெளியாகாத நிலையில் பிரியாவிற்க்கு பாலிவுட் கோலிவுட் என அனைத்து திரையுலகினர் மத்தியில் இருந்தும் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது .