priya warrier alart the fans
காந்தக் கண்ணழகி
ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் காந்தக் கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியார்.ஒரு அடார் லவ் படத்தில் நடிக்கும் போது நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அழகி போட்டி
மலையாள சேனலான கைரலி டிவி கடந்த ஆண்டு நடத்திய கோல்டன் பியூட்டி அழகி போட்டியில் பிரியா பிரகாஷ் வாரியர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த அழகி போட்டியின் போதே தனக்கு சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கைரலி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தேசிய அளவு
ஒரு அடார் லவ் பட பாடல் ஹிட் ஆகும் என்று எனக்கு தெரியும்.ஆனால் அது தேசிய அளவில் ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கண்ணால் மேனரிசம்
பாடலை கேட்டதும் பிடித்தது. பாட்டு ஹிட் ஆகும் என்று தெரியும்.வீடியோ ஹிட் ஆகும் என தெரியாது.கண்ணால் எதாவயது மேனரிசம் காட்டும் படி இயக்குனர் என்னிடம் கூறினார்.
சைடு ரோல்
இயக்குனர் சொன்னதும் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து காண்பித்தேன். அதை பார்த்து இயக்குனர் அந்த நடிகரையும் கண்ணால் நடிக்க வைத்தார். படத்தில் சைடு ரோலில் நடிக்க தான் என்னை முதலில் ஒப்பந்தம் செய்தார்கள்.ஆனால் நான் கண்ணால் பேசியதை பார்த்து இயக்குனர் எனக்காக கதையை மாற்றி என்னை மெயின் ரோலில் நடிக்க வைத்தார்.
போலி கணக்குகள்
நான் முதலில் பேஸ்புக்கிலேயே இல்லை.ஆனால் தற்போது என் பெயரில் பேஸ்புக்கில் பல போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் ஏமாந்து விடாமல் இருக்க பேஸ்புக் வந்துள்ளேன்.என்னுடைய கல்லூரி நண்பர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரிய வில்லை.கல்லூரிக்கு செல்ல மகிழ்ச்சி கலந்த டென்ஷனாக உள்ளது என்றார் ப்ரியா
