மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இவரின் கண் சிமிட்டல் காட்சி வெளியான ஒரே நாளில் இவரை மிகவும் பிரபலமாக்கியது.

அதன்பிறகு ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து. இந்த படத்தை வெளியிட கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளார், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக சந்திர சேகர் எலட்டி இயக்கும் படம் ஒன்றிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பிரியா வாரியர், டோலிவுட்டின் பல பிரபல நடிகர் நடிகைகளை சந்தித்து போட்டோ எடுத்து அதை தனது இணைய பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக  வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு போட்டோவை வெளியிட்டு,  விஜய் தேவரகொண்டாவின் ரசிகையான தான், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த புதிய ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.