புருவத்தை சுழட்டி ஒரே நாளில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் அறிமுகமாகியுள்ள  'ஒரு அடார் லவ்' படம், மலையாள ரசிகர்கள் மற்றும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்ப்பார்க்கக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த படம், காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் அதே தினத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் காட்சி வீடியோ ஒன்று யு-டியூபில் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் நாயகி பிரியாவுக்கு,  நாயகன் ரோஷன் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது உள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக இப்படி ஒரு காட்சி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பள்ளி சீருடையில், இருக்கும் போது இப்படி ஒரு காட்சி எடுப்பதா என சமூக வலைத்தளத்தில் பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்