priya bavani shanker tweet

'மேயாத மான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரியா பவானி.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பல்வேறு குழப்பத்தோடு சீரியலில் நடிக்க வந்த இவர். இரண்டே வருடத்தில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்து இழுத்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே சின்னத்திரை மூலம் மிகவும் பரிச்சயமானவர் என்பதால், இவருக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இவருக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து இவருடைய பெயரில் ஒரு சில போலி கணக்குகளும் செயல் பட்டு வருகின்றன.

இது குறித்து அறிந்த பிரியா, தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுதான் எனது அதிகாரப்பூர்வமான அக்கௌண்ட் @priya_Bshankar தன்னுடைய பெயரில் இயங்கும் மற்ற ட்விட்டர் கணக்குகள் போலி என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…