சின்னத்திரை சீரியல்களில், பல ரசிகர்கள் மனதை கவர்ந்தது நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் 'வாணி ராணி' சீரியல். 2013 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை ஆறு வருடங்களாக ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து வருகின்றனர். மேலும் இதுவரை நான்கு இயக்குனர்கள் இந்த சீரியலில் மாறி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் வாணி ராணி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும், இந்த சீரியலை தொடர்ந்து ராதிகா வரலாற்று சரித்திர தொடராக உருவாகும் 'சந்திரகுமாரி' என்கிற சீரியலில் நடிக்க உள்ளதாகவும் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில் படபிடிப்பும் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 'வாணி ராணி' சீரியலில் ராணியாக நடித்து வரும் ராதிகாவிற்கு கணவராக, சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் ப்ரித்விராஜ் இந்த சீரியலில் நடித்து மிகவும் கொடுமையான அனுபவம் என கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறுகையில் ‘தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் கொடுமையான சீரியல் பயணம் என்றால் 'வாணி ராணி' தான், படப்பிடிப்பில் மிகவும் கொடுமையை அனுபவித்தேன். என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் 'வாணி ராணி' என வெளிப்படையாக கூறியுள்ளார்.

குறிப்பாக இந்த  சீரியலில் எந்த பிரச்சனை நடந்தாலும், ஹீரோயின் தான் கண்டுப்பிடிப்பார், சரி கண்டுப்பிடிக்கட்டும், அதற்கு ஏன் எங்களை டம்மி பீஸாக காட்ட வேண்டும்? என கேள்விகளை எழுப்பு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த சீரியல் இயக்குனருக்கு வீட்டில் ஏதோ பிரச்சனை போல, எப்போது பார்த்தாலும் சோக காட்சிகளை தான் கொடுப்பார். எப்படியோ.. இன்னும் சில நாட்களில் 'வாணி ராணி' முடியவுள்ளது.  இனி தான் எனக்கு நிம்மதி’ என ப்ரித்விராஜ் கூறியுள்ளது... ரசிகர்களையே அதிர்சியாக்கியுள்ளது.