கடைசியாக 2003ம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’க்குப் பின்னர் 15 ஆண்டுகளாக வெற்றிப்படமே இல்லாமல், ஆனால் ‘டாப் ஸ்டார்’ பட்டத்தை விட்டு இறங்காமல் இருக்கிறார் நடிகர் பிரசாந்த். ‘வின்னர்’ படத்தின் ஒரிஜினல்  ஹீரோ வடிவேலு என்பதும் அதில் பிரசாந்த் வெறும் ரன்னர்தான் என்பது தனிக்கதை.

இப்ப என்னத்துக்கு திடீர்னு பிரசாந்த் பஞ்சாயத்து என்று கேட்கத்தோணும். ஒரு பெரும் இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜானி’ படம் வரும் 14ம் தேதியன்று ரிலீஸாகிறது. இ[ப்படத்தை அதிர்ஷ்டவசமாக அவரது தந்தை தியாகராஜன் இயக்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக தியாகராஜனே பிரசாந்தை குத்தகைக்கு எடுத்து வரிசையாக இயக்கிவந்தார்.

வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தில் கிளுகிளு குட்டி சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ஒன்றிரண்டு தோல்விப்படங்கள் கொடுத்தாலே காணாமல் போகும் சினிமாவில் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 15 ஃப்ளாப் படங்கள் வரை கொடுத்திருந்தாலும் கட்டு மஸ்தான உடலுடன், இரும்பு இதயத்துடன் ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் பிரசாந்துக்கு அவரது ‘ஜானி’ கைகொடுத்து சினிமா ஜர்னி சிறப்பாக நடக்க உதவுமா என்பதை இன்னும் பத்து நாட்கள் பல்லைக்கடித்து காத்திருக்கவேண்டியதுதான்.