பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது முதலில் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்கள் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா. ஆனால் நாளடைவில் இவர்கள் தாங்கள் காதலிக்க வில்லை நண்பர்கள் போல் தான் பழகியதாக கூறி, இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே வெளியில் ஒரு பெண்ணை காதலித்து வந்த நடிகர் மஹத். உள்ளே இருக்கும் இளம் நடிகை, யாஷிகாவிடம் அதிக நெருக்கம் காட்டினார். இவர்களின் செயல் அத்துமீரியதால் பலருக்கும் இவர்கள் காதலிக்கிறார்களா என சந்தேகம் எழுந்தது. இவர்கள் நெருங்கி பழகுவதை பிக்பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்களும் கண்டித்தனர்.

இத்தனை நாட்கள் யாஷிகாவை தான் தோழியாக மட்டுமே பார்ப்பதாக கூறி வந்த மஹத்... நேற்றைய நிகழ்ச்சியில் யாஷிகாவை சூழ்நிலை காரணமாக காதலிப்பதாக கூறினார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருந்தவர்களுக்கே இது பேரதிர்ச்சியாக இருந்தது என்றால்.., மஹத்தை காதலிக்கும் அவருடைய காதலிக்கு இந்த தகவல் எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் நினைத்து பாருங்கள். 

மேலும் இதுகுறித்து ப்ரசியிடம் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினர். 

ஏற்கனவே பலமுறை மஹத் - யாஷிகாவின் நெருக்கம் குறித்து, கேள்வி எழுப்பிய போது, 'மஹத்தின் சுபாவம் அது அனைவருடனும் மிகவும் ஜாலியாக பழகுபவர். அவரை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என மஹத்துக்கு சப்போர்ட் செய்து வந்தார் பிராச்சி . 

ஆனால் நேற்று மஹத் பேசியவிதம் ப்ராட்சியை மிகவும் பாதித்ததாக தெரிகிறது... "இது குறித்து சமூக வலைத்தளத்தில் இவர் கூறியுள்ளது... மஹத் என்னை பிரிய மனம் இல்லை என்று கூறிதான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள், நான் இப்போது அவருடன் இல்லை, வெளியே வந்தால் நாங்கள் இருவரும் பேசி முடிவு எடுப்போம். இப்போது யாஷிகாவுடன் காதலில் இருக்கிறார், எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இது என் வாழ்க்கை மாற்றிவிடாது, என்னை நான் பார்த்துக் கொள்வேன். இனி அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், என்று அதிரடிய பதிவு போட்டுள்ளார்.