மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில், மஹத் மற்றும் பிராச்சியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்:மதுரை மல்லி போல்... மப்பு மந்தாரமுமாய் இருக்கும் நடிகை ரேஷ்மி தேசாய்! 

இந்நிலையில் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ள பிராச்சி, மஹத் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டிக்கு தனியாக படுத்து கொள்ள பெட் இருந்தும், அது தங்களுக்கு நடுவில் தான் படுத்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் சூடான காற்று தன் மீது படும் போது தான், அது மஹத் இல்லை என்பதே தெரிகிறது என படுக்கை அறை ரகசியத்தை இப்படி பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் பிராச்சி.