Asianet News TamilAsianet News Tamil

லஷ்மியை தொடர்ந்து அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட பிரபுதேவா..!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா நடித்த, 'லஷ்மி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவோடு அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

prabudeva next moive name announced
Author
Chennai, First Published Aug 30, 2018, 3:25 PM IST

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா நடித்த, 'லஷ்மி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவோடு அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இந்த படத்தை தமிழில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

prabudeva next moive name announced

பிரபுதேவா நடிக்கும் இந்த படத்திற்கு 'தேள்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைப்பாளராகவும், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவாளராகவும் பிரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மற்றும், மற்ற நடிகர் நடிகைகளின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios