prabu support vishal

பிரபல நடிகர் பிரபு புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி முடித்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நான், விவசயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது நடிகர் சங்கத்தினர் அனைவரும் தீவிரம் காட்டி வரும் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிக்கு, தான் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போல் நடிகர் சங்கத்தினர் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட்டு இந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து காட்டுவோம் என நம்பிக்கையோடு பேசினார், அவரிடம் விஷால் அறிவித்துள்ள ஒரு ரூபாய் டிக்கெட் திட்டம் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, இந்த திட்டத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் இதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.