கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராக காதல்கிறார்கள் என கூறப்பட்டவர்கள் நயன்தாரா மற்றும் பிரபு தேவா....

இவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்த போது தீடீர் என பிரிந்து அதிர்ச்சி கொடுத்தனர். பிரபு தேவாவை மணந்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா ஒரு இளம் இயக்குனருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்து வருகிறார், என்பது பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருடன் உள்ள காதலை ஒரு முறை கூட நயன்தாரா வெளியில் சொன்னது இல்லை.

ஒரு பக்கம் காதல் வாழ்க்கையில் இருந்தாலும் மற்றொரு புறம் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் உடனே ஓகே சொல்லி விடுகிறாராம் நயன்.

இந்நிலையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் யதார்த்தமாக பிரபுதேவாவை சந்தித்துள்ளார் நயன்தாரா, அங்கு இருவரும் சில நேரங்கள் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

இவர்களின் சந்திப்பில் நட்பு ரீதியாக தான் பேச்சு இருந்ததாகவும் மீண்டும், படத்தில் கூட இருவரும் இணைய வாய்ப்பு இல்லை என கிசுகிசுக்க படுகிறது..