பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் மோதத் தயாரான பிரபுதேவா...
இம்முறை பொங்கலை ஒட்டு ஏழெட்டு விடுமுறை தினங்கள் இருப்பதால் ரஜினியின் தர்பார் படத்தோடு போட்டியிடவிருப்பதாக தனுஷின் ‘பட்டாஸ் பட நிறுவனமும் சூர்யாவின் சூரரைப் போற்று பட நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று அப்போட்டியில் பிரபு தேவாவின் ’பொன் மாணிக்கவேல்’படமும் இணைந்துள்ளது. பொங்கலுக்கு இன்னும் 50 தினங்கள் வரை இருப்பதால் இன்னும் சில படங்கள் கூட இப்பட்டியலில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
ஜனவரி ‘20 பொங்கல் தினத்தன்று ரஜினி படத்துடன் தனுஷும் சூர்யாவும் மோதவிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில் தற்போது பிரபுதேவாவின் ‘பொன்மாணிக்கவேல்’படமும் அதே தேதியில் ரிலீஸாகவிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதே பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.