முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்த பாடலை வெளியிட படக்குழு தயாராகி உள்ளது. அதன்படி ராதே ஷ்யாம் படத்தின் இரண்டாவது பாடல் புரோமோ வீடியோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

லவ் ஆந்தம் என்கிற அப்பாடலின் புரோமோ வீடியோ நாளை வெளியிடப்பட உள்ளது. அப்பாடலின் ஹிந்தி பதிப்பின் புரோமோ நாளை பிற்பகல் 1 மணிக்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பதிப்புகளின் புரோமோ மாலை 7 மணிக்கும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் சிம்பு, லவ் ஆந்தம் என்கிற ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.