ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது  பாகுபலி 2 திரைப்படம், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு தான் மாபெரும் வரவேற்பு உள்ளது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டார்  பிரபாஸ். இந்த திரைப்படத்திற்காக கடந்த 5 வருடமாக வேறு படங்களையும் ஒத்துகொள்ளாமல் இருந்தார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் பகுதி 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள நிலையில், இரண்டாவது பாகம் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவருகிறது.

இந்த படத்திற்கு பிரபாஸ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தான்  பலருக்கும் உள்ள கேள்வி. முதல் பாகத்திற்கு மட்டும் பிரபாஸ் வாங்கிய சம்பளம் 20 கோடி ரூபாய், மற்றும் இரண்டாம் பாகத்திற்கு அதை விட ஐந்து  மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.