prabas reject famous director movie for salary

பாகுபலி திரைப்படம் மூலம் உலகமே அறிந்த நடிகராகி விட்டவர் நடிகர் பிரபாஸ். தற்போது சாஹோ திரைப்படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இந்தப் படத்தில் சம்பளம் குறைவாக பேசப்பட்டதால் இந்தப் படத்தை பிரபாஸ் நிராகரித்து விட்டதாக தற்போது ஒரு தகவல் பரவியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபாஸ் தரப்பு, தற்போது நான் சாஹோ படத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால் எந்தப் படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.