prabas love conforme for Telugu medias
சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை படைத்த படத்தில், மகிழ்மதி மன்னனாக நடித்திருக்கும் , இந்திரசேனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பேரழகிக்கும் காதல் துளிர் விட்டு இருப்பதாக சில மாதங்களாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர்களது காதலை உறுதி செய்வது போல தெலுங்கு மீடியாக்கள் ஒரு சில செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் ரீல் ஜோடியாக , பிரமாண்ட சாதனை படைத்த படத்தில் இணைத்த ஜோடிகள் இடையில் காதல் இருப்பதால் தான் இப்படி ஒரு கிசுகிசு பரவியும் இதுவரை இருவரும் இதனை மறுக்காமல், மௌனம் காத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவரும் மன்னன், விரைவில் சொந்த ஊருக்கு திரும்பியதும் திருமண பேச்சுகள் ஆரம்பமாக உள்ளதாகவும். அப்போது இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
