இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம், இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி'.

இந்த படத்தில், நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார்.  பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி,  உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.  இதனால் நடிகர் பிரபாஸிற்கு உலக அளவில் தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஜப்பானிலிருந்து, ஹைதராபாத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானை சேர்ந்த பிரபாஸ் ரசிகைகள், சிலர் அவர் வீட்டை கண்டதும், அந்த இடத்தில் இறங்கி அவர் வீட்டின் கேட் முன்பு நடனமாடிய படி எடுத்துக் கொண்டுள்ள அட்டகாசமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில் ஜப்பானை சேர்ந்த பெண்கள்  அனைவரும் இந்திய பெண்கள்  போல் உடை அணிந்து உள்ளனர். இது முதல் முறை அல்ல ஏற்கனவே ஒரு முறை,  ஜப்பான் ரசிகை ஒருவரிடமிருந்து பிரபாஸிற்கு கடிதம் வந்துள்ளது.   

 

பிரபாஸ் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சாஹு படத்தில் நடித்துள்ளார்.  ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக உள்ள,  இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார்.  ஷரதா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் நடிகர் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் போன்ற பலர்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.