நடிகை அனுஷ்கா - பிரபாஸ் இருவரும் இதுவரை 4 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக  பாகுபலி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகுபலி 2 படத்திலும் இரண்டு பேரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இதனால் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள் என்றும் தகவல் பரவியது.

இந்த தகவலை பிரபாஸ், முழுமையாக மறுத்தார். மேலும்  ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தொடர்ந்து நான்கு படங்களில் ஜோடியாக நடித்தால் இதுபோன்ற வதந்திகள் பரவுவது சகஜம்தான்.  அதுபற்றி நான் கவலைப்படவில்லை என்று அவர் கூறினார். எனினும் அனுஷ்கா பிரபாஸ் இருவரையும் தொடர்புபடுத்தி காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த கதாநாயகியை காதலிக்க தோன்றுகிறது? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் கத்ரீனா கைப்   என பதிலளித்தார்.

இதனால் அனுஷ்கா - பிரபாஸ் ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் என கூறி வந்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.  நடிகை கத்ரீனா கைப் சில  காதல் கிசுகிசுவில் சிக்கி,  இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.