100 நாள் ஓடிய மன்னிக்கவும் டங் ஸ்லிப் ஆயிடுச்சி, 100 ஓட்டி புகழ்பெற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சந்தானத்தோடு நடித்து அடுத்த லெவலுக்கு ப்ரமோஷன் ஆனார். 

தொடர்ந்து பல படங்களில் காமெடியில் கலக்கி வந்த இவர்  டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை 10 கோடி ரூபாய் கொடுத்தால் 1000 கோடி கடன் பெற்று தருவதாக போலியான வாக்குறுதியை அளித்து ஏமாற்றியதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அதுமட்டுமல்ல , பல்வேறு மோசடி வழக்குகள் பதிவானது.

இவர் மீது பல வழக்குகளும் உள்ள நிலையில், நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் இதுவரை வீட்டிற்கு வரவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என சொல்கிறார்கள். 

இதனால் கவலையில் இருந்த பவர்ஸ்டாரின்  மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் கணவர் காணவில்லை என புகார் அளித்துள்ளார். பல்வேறு மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.