power star cheating in money
'லத்திகா' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆன டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் இவர் மீது ஏற்கனவே, பல முறை பண மோசடி புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிப் புகாரில் சிக்கி சமீபத்தில் கூட இரண்டு முறை காவல் நிலையம் சென்று, ஜாமீனில் வெளிவந்தார்.
அதன் பின்னும் தற்போது இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இவர் மீது சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரில், தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 1/2 லட்சம்வாங்கியிருக்கிறார்.
ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் அவர் பெற்றுத்தரவில்லை. நேரில் சென்றாலும் அவரைப் பார்க்க முடியவில்லை. என் பணத்தையும் தராமல் இழுத்தடிக்கிறார். எனக்கு உரிய பணத்தை அவரிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று தயாநிதி அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார்.
