தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் நடிப்பையும் தாண்டி தற்போது பாடல்மு, தயாரிப்பு, இயக்கம் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்த.
இவர் முதல் முதலாக இயக்கி வரும் 'பவர் பாண்டி' படத்தில் . ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குவதோடு முக்கிய வேடத்திலும் தனுஷ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அவர் கூறியுள்ளது 'பவர்பாண்டி ' படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே மீதியிருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு வரும் ஏப்ரலில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
