Asianet News TamilAsianet News Tamil

இளம் பெண்களை குறிவைத்து ஆபாச உரையாடல்.. திரைப்பட நடிகர் மீது புகார்..

இந்நிலையில்  டேனியல் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழுள்ள பள்ளி பெண்களை குறிவைத்து ஆபாசமாக  உரையாடும் புகைப்படங்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Porn conversation targeting young women .. Complaint against film actor ..
Author
Chennai, First Published Apr 20, 2021, 10:56 AM IST

18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளை குறிவைத்து ஆபாச உரையாடலில் ஈடுபடுவதாக திரைப்பட நடிகர் டேனியல் ஆனி போப் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 "பிரண்டே... லவ் மேட்டரே... பீல் ஆயிட்டாப்ல...  ஆஃப் சாப்டா கூல் ஆயிடுவாப்ல" என்ற திரைப்பட வசனத்தின் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் டேனியல் ஆனி போப். இவர் பொல்லாதவன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இரண்டாம் குத்து உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் வெளியான 100 நாள் நிகழ்ச்சி ஒன்றிலும் போட்டியாளராக பங்குபெற்றார். 

Porn conversation targeting young women .. Complaint against film actor ..

இந்நிலையில்  டேனியல் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழுள்ள பள்ளி பெண்களை குறிவைத்து ஆபாசமாக  உரையாடும் புகைப்படங்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் சாமுவேல் என்ற நபர் தனது சமூக வலைதள பக்கத்தில் டேனி இளம் பெண்களிடம் தாமாக முன்வந்து ஆபாசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டியதோடு, அந்த உரையாடலையும் ஆதாரமாக காண்பித்துள்ளார். மேலும், மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டேனியல் இளம் பெண்களிடம் தான் ஒரு நடிகரென அறிமுகமாகி அவரது வலையில்  விழ வைத்து ஆபாசமாக பேசி வருவதாகவும், இளம் பெண்கள் என்பதால் மானத்திற்கு பயந்து புகார் கொடுக்க முன்வர தயங்குவதாகவும் ஜேசன் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி நடிகர் டேனி இன்ஸ்டாகிராமில் பேசி இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக அவரது அறையில் சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக்கூறி, பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோவையும் ஜேசன் சாமுவேல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ மற்றும் டேனியல் பெயரில் பல்வேறு உரையாடல்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. 

Porn conversation targeting young women .. Complaint against film actor ..

இந்நிலையில் டேனியல் ஆனி போப் தரப்பு வழக்கறிஞர் ரகுமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கடந்த 4 நாட்களாக டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய வீடியோ, புகைப்படங்கள், அனைத்தும் போலியானவை எனவும் தனது பெயரை கெடுக்கவே இது போன்ற செயலில் சில விஷமிகள் ஈடுபடுவதாக டேனியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டு வரும் வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்ஸ் போன்றவைகளை சமூக வலைதளங்களில் இருந்து சம்மந்தப்பட்ட நபர்களே உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்படும் எனவும் அவதூறு வழக்கு ஒன்றும் தொடர உள்ளதாகவும் டேனியல் தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை காவல் நிலையங்களில் புகார் அளிக்கவில்லை எனவும் அளித்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios