popular actress second marriage news

தமிழில் நடிகர் பார்த்திபன், பிரபுதேவா இணைந்து நடித்த 'ஜேம்ஸ்பாண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரேணுதேசாய். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். மேலும் இரண்டு படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தெலுங்கில் பிரபல நடிகர் பவன் கல்யாணுடன் நடித்த போது, இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

தெலுங்கு திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்களுக்குள், ஒரு சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பவன் கல்யானை விவாகரத்து செய்த பின், தன்னுடைய சொந்த ஊரான பூனேவிற்கே சென்று விட்டார் ரேணுதேசாய். 

இந்நிலையில் இவர் 2 ஆவது திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன். இப்போது அன்பான காதலர், உண்மையான வார்த்தைகள், நேர்மையான செயல்கள் மூலம் கண்டுபிடித்து விட்டேன்." என்று கருத்து பதிவிட்டு ஒரு ஆணின் கையேடு கைகோர்த்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதனால் விரைவில் இவர் அவருடைய காதலரை திருமணம் செய்ய உள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.