விஜய்-அட்லீ கூட்டணியில், ரசிகர்களில் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் திரைப்படம் 'விஜய் 63 ' . இந்த படம் துவங்கியதில் இருந்து ஓவ்வொரு நாளும், பல ஸ்வாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இதுவரை, இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயக நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகர் கதிர், காமெடி நடிகர் யோகிபாபு, பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் மகள், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதைத்தொடர்ந்து,  தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில், சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும், குழந்தை நட்சத்திரம் பூவையார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பாடலும் அவர் பாடவுள்ளாராம்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து பூவையாருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இருந்து சென்று பலர் பிரபலன்களாக அறியப்படும் நிலையில், இந்த குட்டி பிரபலத்தின் வருகைக்கும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.