poonam bajva acting with g.v.prakash pair

பிரபல ஒளிப்பதிவாளர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படமான 'குப்பத்து ராஜா' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. 

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சுந்தர் சியின் 'அரண்மனை 2', 'முத்தின கத்தரிக்காய்' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் உடன் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ,ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.