ஹிந்துஸ்தான், மேடம் நம்பர் 1, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் முன்னணி  நாயகியாக நடித்தவர் பிரபல நடிகை  பூஜா தட்வால்.  47 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிபி நோயால் பாதிக்கப்பட்டார்.

இவருக்கு டிபி நோய் அதிகமாகவே இவரை இவருடைய குடும்பத்தினர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின் இவரை மருத்துவ மனையிலேயே அனாதையாக விட்டு விட்டு இவருடைய கணவர் மற்றும்  குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பினர் .

இவரை அனுமதித்த முதல் நாள் மட்டுமே இவர்கள் இவருடன் இருந்ததாக அந்த மருத்துவமணையில் உள்ளவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தற்போது நடிகை பூஜா தட் வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவ மனைக்கு வருபவர்களிடம் கையேந்தி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவ மனையில் உள்ளவர்கள் தான் இவரை பார்த்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இவர் பல சினிமா பிரபலங்களுக்கு உதவிகள் செய்து வரும், சல்மான் கான் தனக்கும் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இந்த நிலை பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.