Pooja for hiphop adhi new film produced by Sundar C. ...

சுந்தர். சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் அடுத்தப் படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’.

இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இந்தப் படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப் படத்தில் . ஆதி ஹாக்கி வீரராக நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதன் புகைப்படத்தை ஆதி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பூஜையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன், ஷாரா, விஜய் விருஸ், பென்னி ஆலிவர், கௌசிக் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.