இந்த வருடத்தில் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர் ,முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'தர்பார்' திரைப்படம் ஜனவரி 9  ஆம் தேதி வெளியாகி வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. 

இதை தொடர்ந்து, ஜனவரி 16 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் மருமகன் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் வெளியாகி பல்வேறு திரையரங்கங்களில் தற்போது ஓடிக்கொண்டுள்ளது. 

இதே போல், இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, நடிகர் பிரபுதேவா... அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 'பொன்மணிக்க வேல்' . ஆனால் திடீர் என பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 21 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளார் பொன்மாணிக்க வேல்.

இந்த படத்தை முகில் செல்லப்பன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு இயக்கியுள்ளார். பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் ஜெ.மஹேந்திரன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  இதுவரை பார்த்திராத, புதிய பிரபுதேவாவை ரசிகர்கள் பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.