ponmagal vanthal serial actress try to sucide why?
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று, 'பொன்மகள் வந்தாள்'. மாமியாரின் எதிர்ப்பை மீறி நாயகனை கரம் பிடிக்கும் நாயகி, பின் மாமியார் மூலம் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை விறுவிறுப்புடன் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

இந்த சீரியலில், கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஆயிஷா. இந்நிலையில் கடந்த வாரம் இந்த சீரியலில் இருந்து, இவர் திடீர் என நீக்கப்பட்டார்.

இதனால் ரசிகர்கள் பலர், சமூக வலைத்தளத்தில் ஏன் ஆயிஷா, சீரியலில் இருந்து விலகி விட்டீர்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வகையில், கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு ஒரு பேட்டியில் பதில் கொடுத்துள்ள ஆயிஷா பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கும் இயக்குனருக்கும் இந்த சீரியல் துவங்கியதில் இருந்து சில பிரச்சனைகள் இருக்கிறது". ஒருமுறை நான் படப்பிடிப்பில் உடை அணிந்து கொண்டிருக்கும் போது இயக்குனர், கதவை தட்டி விட்டு உள்ளே வரவேண்டும் என்கிற அடிப்படை கூட தெரியாமல் திடீரென்று கதவை திறந்து உள்ளே வந்துவிட்டார்.
மேலும் அப்போது எல்லோரும் வந்து விட்டார்கள். இதனால் மிகபெரிய அசிங்கமாகிவிட்டது. என் அறை கதவை மூடிக்கொண்டு சத்தமாக அழுதேன். ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய கூட முயற்சி செய்தேன் என்று நடிகை கூறியுள்ளார். இதன்மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாவதை தடுக்கவே ஒரேயடியாக இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
