பொல்லாத உலகம் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது..ஜீவி இசையில் தனுஷ் போடும் துள்ளல் ஆட்டத்துடன் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது. பொல்லாத உலகம் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொல்லாத உலகம் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது..ஜீவி இசையில் தனுஷ் போடும் துள்ளல் ஆட்டத்துடன் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.மைக்கில்ஜாக்சன் ஸ்டெப்பில் அசத்தும் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.. பொல்லாத உலகம் பாடல்..விவேக் வரிகளில், தனுஷ - அறிவு குரலில் மாஸ் காட்டவுள்ளது..

YouTube video player