வில்லியாக நடித்தாலும், கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு நடிப்பில் கெத்து காட்டி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை என்பதையும் தாண்டி, பெண்களுக்கான விழிப்புணர்வு, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு என தன்னால் முடிந்த அளவிற்கு சமூக பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், திரையுலகை சேர்ந்த பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்க, சேவ் சக்தி என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசியுள்ளார் வரலட்சுமி. 

இதுகுறித்து அவர் பேசியதாவது... உலக தமிழ் மக்கள் அனைவரும், பொள்ளாச்சி சம்பவத்திற்கு குரல் கொடுத்த போதிலும், தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மிகப்பெரும் ரசிகர் படையை கொண்டிருக்கும் அவர்களுக்கு சமூக பொறுப்பும் அதிகம் இருக்கிறது. இதுபோன்று பேச வேண்டிய இடங்களில் இந்த மாபெரும் சக்திகள் பேச தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, அவர்களுக்கு இது குறித்து பேச தைரியம் இல்லையா என மறைமுகமாக அவரை விளாசியுள்ளார். இவரின் இந்த அதிரடி பேச்சுக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.