இப்படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடல் எடுக்க முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவை நடிக்கவைக்க விரும்பி அணுக ‘ஜோக்கர்’ பார்த்த நம்பிக்கையில் சற்றும் யோசிக்காமல் அப்பாடல் காட்சியில் நடிக்க அவர் சம்மதித்தார்.


’குக்கூ’,’ஜோக்கர்’ஆகிய இரண்டே படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் கவனம் ஈர்த்த ராஜு முருகனின் அடுத்த படத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நடிக்கிறார். இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியும் நடிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தனது மூன்றாவது படமாக ராஜு முருகன் ஜீவா நாயகனாக நடிக்கும் ’ஜிப்ஸி’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தி நடிகை நடாஷா சிங் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடல் எடுக்க முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவை நடிக்கவைக்க விரும்பி அணுக ‘ஜோக்கர்’ பார்த்த நம்பிக்கையில் சற்றும் யோசிக்காமல் அப்பாடல் காட்சியில் நடிக்க அவர் சம்மதித்தார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, சமூக செயல்பாட்டாளர்கள் பியுஸ் மனுஷ், திருமுருகன் காந்தி, ராஜவேல் நாகராஜன், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் அப்பாடல் காட்சியில் தோன்றுகின்றனர்.