சர்கார் ரிலீஸாகி பத்து நாட்கள்தான் ஆகியிருக்கும் நிலையில், அதற்குள் பூஜை போட்டுவிடப்பட்ட இந்தப் படம் அடுத்த தீபாவளிக்குதான் ரிலீஸாகிறது. ஆக ஒரு வருஷம் உட்கார்ந்து உட்கார்ந்து செதுக்கப்பட இருக்கிறது இந்தப்படம். இந்தப் படம் ரிலீஸாகும் சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து புதிய மத்திய அரசு பொறுப்பேற்று இருக்கும். 

ச்சும்மாவே அரசியல் ஃபீலில் இருந்த விஜய்யை, சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வின் சர்கார் ஆடிய தாண்டவமானது ரொம்பவே உசுப்பேற்றிவிட்டது. விளைவு, அரசியலுக்குள் இறங்கியே தீருவது எனும் முடிவுக்கு வந்துவிட்டார் மனிதர். அதன் விளைவு இனி வருஷத்துக்கு ஒரு படம் தானாம், மீதி நாட்களில் அரசியலுக்கு ஆயத்தமாக போகிறாராம் தளபதி. 

அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் இன்ச் பை இன்ச் சீண்டித் தள்ளி விஜய் சதாய்த்த ‘சர்கார்’ படம் வணிக ரீதியில் ஹிட்டோ இல்லையோ ஆனால் அரசியல் ரீதியில் அவரை அமர்க்களமாக மேடேற்றிவிட்டது. கடந்த சில காலங்களாகவே அவரை அவர் அப்பா ‘வா அரசியலுக்கு’ என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப்படத்தின் ரியாக்‌ஷன்கள் தளபதியை தட்டி எழ வைத்துவிட்டது. 

இதனால் வருஷத்த்து மூணு, ரெண்டு படமெல்லாம் இனி கிடையாது, ஒரு படம்தான் ஒரே படம்தான். அதுவும் மக்கள் பிரச்னை, அரசாங்கத்தின் அலட்சியம் என்று அரசியல் சுவடிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். சர்காரால் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு சூடு தணிந்துவிடுவதற்குள் அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிட வேண்டும்! என்பதால்தான், சர்கார் ரிலீஸுக்கு பின் திட்டமிட்டு வைத்திருந்த ஃபாரீன் டூரையும் தள்ளி வைத்துவிட்டார் தளபதி! என்கிறார்கள். 

அட்லீ இயக்கத்தில், கல்பாத்தி டீம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படம் பூஜையோடு துவங்கிவிட்டது. படத்தின் பெயர் ‘ஆளப்போறான் தமிழன்’ அதாவது ‘ஏ.டி’ என்று அன் அஃபீஸியல் தகவல்கள் தடதடக்கின்றன. மெர்சலில் மத்திய அரசை கிழித்திருந்த விஜய், சர்காரில் தமிழக அரசை தாரை தப்பட்டையுடன் பிய்த்து துவங்க விட்டிருந்தார். ஆளப்போறான் தமிழனிலோ...தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும் ஒரு இளைஞன் இந்த தேசத்தின் தலைவனாக மாறி அதை வழிநடத்துவதுதான் கதையாம். 

சர்கார் ரிலீஸாகி பத்து நாட்கள்தான் ஆகியிருக்கும் நிலையில், அதற்குள் பூஜை போட்டுவிடப்பட்ட இந்தப் படம் அடுத்த தீபாவளிக்குதான் ரிலீஸாகிறது. ஆக ஒரு வருஷம் உட்கார்ந்து உட்கார்ந்து செதுக்கப்பட இருக்கிறது இந்தப்படம். இந்தப் படம் ரிலீஸாகும் சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து புதிய மத்திய அரசு பொறுப்பேற்று இருக்கும். அது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியோ அல்லது மீண்டும் பி.ஜே.பி.யோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும், இந்த இருவரில் ஒருவர்தான்! என்பதே விஜய்யின் முடிவு.

காங்கிரஸ் என்றால் ஊழல், பி.ஜே.பி. என்றால் மதவாதம் பிளஸ் சர்வாதிகாரம் எனும் தொனியில் திட்டமிட்டு வைத்துள்ளார்களாம். அதற்கு ஏற்பவே புதிய படத்தின் கதை, காட்சியமைப்புகள், வசனங்கள் இருக்குமென்கிறார்கள். மிக ரிலாக்ஸ்டாகவும், மிகவும் நேர்த்தியாகவும் இந்த ஒற்றை படத்துக்காக உழைக்க இருக்கிறார் விஜய். அதேவேளையில் நிறைய ஓய்வு நேரங்கள் அவருக்கு கிடைக்கும். அந்த வேளைகளில் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகள் பற்றி அலச இருக்கிறார் என தகவல். 

சர்காரில் சொன்னது போல் முப்பத்து இரண்டு மாவட்டங்களிலும் இருக்கும் முப்பத்து ரெண்டு தலையாய பிரச்னைகளை தேடி எடுத்து, அதைப் பற்றி பேசுவதாகவும், போராடுவதாகவும் விஜய்யின் அரசியல் வடிவம் இருக்குமாம். இதைச் செய்தாலே ஒட்டு மொத்த தமிழகத்திலும் சேர்த்து கணிசமான வாக்கு வங்கியை வளைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளாராம் தளபதி. அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும் விஜய்யை வர்லாம் ரை! வர்லாம் ரை! என்று வரவேற்குமா தமிழகம்? கவனிப்போம்!