ரூ.50 ஆயிரம் விவகாரம்..! மீரா மிதுனுக்கு புது சிக்கல்..! பறந்தது சம்மன்..!

சென்னை தி நகரில் வசித்து வரும் ரஞ்சிதா என்பவருக்கும் மாடல் அழகியான மீரா மனிதனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மீது ஏற்கனவே புகார் கொடுத்து இருந்தார் ரஞ்சிதா.

இந்த நிலையில் தற்போது தமிழில் மிகவும் பிரபலமாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் மீரா மிதுன். இதற்கிடையில் வரும் ஒன்பதாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அதற்கான சம்மனும் மீரா மிதுனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளதால் நிகழ்ச்சி முடித்து விட்டு வெளியில் வந்த உடன் நேரில் ஆஜராகிறேன் என மீரா மிதுன் கால அவகாசம் கேட்டு உள்ளார். இதற்கு முன்னதாக தற்போது வனிதா விஜயகுமார் மகள் ஜோவிதா தொடர்பாக வனிதாவிற்கும் அவருடைய இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜ்விற்கும் இருக்கும் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. எனவே வனிதா மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, இன்று வனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு மீரா மிதுன் தன்னை  ஏமாற்றிவிட்டார் என ரஞ்சிதா கொடுத்த புகாரில் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல்.