இந்து சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கில், அந்த சமூகங்கள் குறித்த கட்டுக்கதைகளை உருவாக்குவதில் ஒரு அங்கம் தான் இயக்குநர் ரஞ்சித் சொல்லும் பொய்யும் ஆகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்த இனம் குறித்த வரலாற்று கட்டுக்கதைகளை கட்டமைக்க வேண்டும் என ஹிட்லர் காட்டிய வழி இதுவாகும் என ரஞ்சித்தின் கருத்துக்கு கடுமையாக விமசித்துள்ளர் பாமக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் ரத்தினம்.

சமீபத்தில் இயக்குனர் ப.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது, மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.

இவரின் இந்த பேச்சிற்கு பல தரப்புகளில் இருந்து விமர்சனம் எழுந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரஞ்சித்தின் இப்பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

ராஜராஜ சோழனும் எதிர்க்கலகமும்: ஓர் எச்சரிக்கை! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்; ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தமது விடுதலைக்காக கட்டமைக்கும் புனைவு வரலாறுகளுக்கும், ஆதிக்க நிலையில் இருப்பவர்கள் கட்டமைக்கும் புனைவு வரலாறுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

இயக்குனர் ரஞ்சித் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ளும் குழுவினர் தற்போது - ஊடகங்கள், கலைத்துறை, அதிகாரவர்க்கம், நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஆதிக்க நிலையை எட்டியுள்ளனர்.

இப்போது ஊடகங்களிலும், கலைத்துறையிலும் இவர்கள் எதிரிகளாக கருதும் பிரிவினர் யாரும் ஒருஅடி கூட முன்னேற முடியாது. அவர்களின் சமூக அடையாளம் தெரிந்து உடனேயே முற்றிலுமாக ஓரம் கட்டப்படுவார்கள்.

இப்படிபட்ட ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட நிலையில் - இயக்குநர் ரஞ்சித், 'ராஜராஜ சோழனுக்கு எதிரான கருத்துக்களை' தஞ்சை மண்ணில் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர்கள் - சதாசிவ பண்டாரத்தார், நொபுரு கரிஷிமா, சுப்பராயுலு, செம்பகலட்சுமி போன்ற பலரும் சோழப் பேரரசு குறித்து வெளியிட்ட பல ஆழமான வரலாற்று ஆய்வுகள் ஏற்படுத்தாத விவாதத்தை இயக்குநர் ரஞ்சித் கருத்து ஏற்படுத்துகிறது.

இது ஒரு இழி நிலை ஆகும்!

"ரஞ்சித் நோக்கம் என்ன?"

சோழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் என தமிழினத்தை அடையாளப்படுத்தும் வரலாற்று கட்டமைப்புகளை தகர்க்க இயக்குநர் ரஞ்சித் திட்டமிடுகிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்து சமூகங்கள், 'ரஞ்சித் பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக்கொள்ளும் சமூகத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வஞ்சித்தார்கள்' என்கிற வரலாற்று புனைவை கட்டமைக்க முயல்கிறார். இது மாபெரும் எதிர்க்கலக திட்டமிடலின் ஒரு அங்கம் ஆகும்.

ஊடகம், கலைத்துறை, அதிகாரவர்க்கம், நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை ஆகிய இடங்களில் பெற்றுள்ள ஆதிக்க நிலையை பயன்படுத்தி, பெரும்பாலான இந்து சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கில், அந்த சமூகங்கள் குறித்த கட்டுக்கதைகளை உருவாக்குவதில் ஒரு அங்கம் தான் இயக்குநர் ரஞ்சித் சொல்லும் பொய்யும் ஆகும்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்த இனம் குறித்த வரலாற்று கட்டுக்கதைகளை கட்டமைக்க வேண்டும் என ஹிட்லர் காட்டிய வழி இதுவாகும்.

"எதிர்க்கலகம் என்றால் என்ன?"

ஒரு சமுதாயத்தை பிரதிநிதத்துவப் படுத்துவதாக கூறிக்கொள்ளும், ஆனால், அந்த சமுதாயத்தின் நலனில் சிறிதளவும் அக்கறையில்லாத - தம்மிடம் மட்டுமே "சரக்கும், மிடுக்கும்" இருப்பதாகக் கூறிக்கொள்ளும் - ஒரு வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் "எதிர்க்கலகம்" என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது, பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக, மனோவியல் ரீதியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது இந்த வன்முறை கும்பலின் 'எதிர்க்கலக' முன்னெடுப்பு ஆகும்.

'ஒருகாலத்தில் உங்களது முன்னோர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தோம். எனவே, அதற்கு பதிலடியாக இப்போது நாங்கள் உங்களை தாக்குகிறோம். இதுதான் நீதி, இதுதான் நியாயம். எங்களது தாக்குதலை நீங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும். உங்களது உடைமைகள், உரிமைகள், பெண்கள் என எல்லாவற்றையும் எங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்' - என்பது இவர்கள் வைக்கும் வரலாற்று ரீதியான எதிர்க்கலக நியாயம் ஆகும்.

ராஜராஜ சோழன் மோசமானவன் என்பதன் மூலம் இயக்குநர் ரஞ்சித் - தமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக்கள் தமக்கு வரலாற்று ரீதியாக கொடுமை செய்தவர்கள் என கட்டமைக்கிறார்.

"எச்சரிக்கை"

நீங்கள் சோழமன்னர்கள் குறித்து பெருமையாக உணர்வீர்கள் என்றால், நீங்கள் எதிர்க்கலக சித்தாந்தத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர் ஆகும். உங்கள் சொத்தும், நிலமும் பறிக்கப்படுவதற்காக ஒரு நாள் உங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்! என இவ்வாறு அந்த் த பதிவில் கூறப்பட்டுள்ளது.