இன்றைய தினம் தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என நேற்று இரவு முதலே தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தொகுப்பு இதோ... 

இன்றைய தினம் தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என நேற்று இரவு முதலே தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தொகுப்பு இதோ...

பிரதமர் மோடி:

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், பாரத பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைவருக்கு வாழ்த்து கூறி போட்டுள்ள பதிவில், 'ரஜினிகாந்த் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தன்னுடைய படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ' என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

தமிழக முதல்வர் ஸ்டாலின்:

அதே போல் தமிழக முதல்வரான முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்தில் கூறியுள்ளதாவது... "உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
 அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்". என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்:

இவர்களை தொடர்ந்து, அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் ஆர்வம் காட்டிவரும் கமல்ஹாசன், தன்னுடைய நண்பரான ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில்... "இனிய நண்பர் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன். என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

விக்னேஷ் சிவன்:

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் பக்கத்தில் லவ் யூ தலைவா... நீங்கள் சிறந்த அதிர்வை கொடுக்க கூடியவர். அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

யோகி பாபு:

தலைவர் சூப்பர் ஸ்டாருடன் தொடர்ந்து காமெடி காட்சிகளில் அசத்தி வரும் யோகி பாபு... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நீங்கள் நிறைய நிறைய வெற்றிகளை பெற வேண்டும் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் சுரேஷ் கோபி:

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகரான சுரேஷ் கோபி... ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என கூறி அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகை அம்பிகை;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தன்னுடைய இதயத்தில் ஆழத்தில் இருந்து வாழ்த்து சொல்வதாகவும், அவரை ஸ்டைல் மன்னன் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை அவருடன் இணைந்து நடித்த புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் கலையரசன்:

சினிமா வரலாற்றில் என்றென்றும் ஒரே ஒரு தலைவரின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் நடிகர் கலையரசன்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்:

பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலக்ஷ்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கடவுள் உன்னை ஆசீர்வதிக்க வேண்டும், நாங்கள் உங்களை என்றென்றும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது... இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ஸ்ரீ.அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும்!