தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமேரிக்காவில் குடியேறுகிறார்.

இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இருவரும் சமப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2 . 5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18 .25 கோடி ஆகும். திருமண புகைப்படங்களை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் இந்த செயல் மற்ற இந்தி நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் இதனை கேள்வி பட்ட ரசிகர்கள் பலர் பிரியங்கா சோப்ரா மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதால் திருமணத்திற்கு முன்பே இது போன்ற செயலை செய்ததாக மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.