PIL filed against RRR : வரலாற்று உண்மைகளை திரித்து கூறியுள்ளதாகவும், ராம் சரண் சுதந்திர போராட்ட வீரராக  நடித்துள்ள கொமராம்பீம் ஆங்கிலேயர்களிடம் வேலைபார்ப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் படத்திற்கு எதிராக ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அல்லூரி சௌமியா என்ற மாணவி, வரலாற்று உண்மைகளை திரித்து கூறியுள்ளதாகவும், சுதந்திர போராட்ட வீரரான நடித்துள்ள கொமராம்பீம் ஆங்கிலேயர்களிடம் வேலைபார்ப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்துள்ளார். தங்களுக்கு சென்சார் சான்றிதழை வழங்கக்கூடாது என்றும், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்தை பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி பிரமாண்ட செலவில் உருவாக்கிஉள்ளார்.. ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாரானது. படத்தின் இரு சிங்கிள், ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இந்த படம் ஜனவரி 7 க்கு பதில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.