Photo taken by Ajith are kept in Art Gallery ...

தல அஜித் எடுத்த புகைப்பட கலெக்‌ஷன் சென்னை ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.

தல அஜித் பைக் ரைடர், விமானத்தில் பறப்பவர், நன்றாக சமைப்பவர், நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் என்றெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், அவர் எடுத்த புகைப்பட கலெக்‌ஷன் சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் உள்ள “போகஸ் ஆர்ட் கேலரி”-யில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவரின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படத் தொகுப்பு அந்த ஆர்ட் கேலரியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை இயக்குனர் சிவா நேரில் சென்று பார்த்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள விவேகம் வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் 1500 தியேட்டருக்கும் மேலாக வெளியாகவுள்ளது.

பிரியாணி விருந்தை தொடர்ந்து “விவேகம்” வெளியாவதை முன்னிட்டு ரசிகர்களுக்கு போட்டோ விருந்து கொடுத்துள்ளார் தல அஜித். நீங்கள் சென்று ருசித்துப் பாருங்கள்.