பேட்ட படத்தில் விஜய்சேதுபதி உண்மையிலேயே வில்லனா? டவுட் கிளப்பும் புதிய ஸ்டில்!

'பேட்ட’ படம் குறித்து நான் சொல்லும் வரை எதுவும் பேசக்கூடாது என்ற இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் கடும் கட்டுப்பாட்டையும் மீறி விஜய்சேதுபதி படத்தில் ரஜினி மற்றும் நவாசுதின் சித்திக் நடிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Petta...Rajini, Vijay Sethupathi new look poste

'பேட்ட’ படம் குறித்து நான் சொல்லும் வரை எதுவும் பேசக்கூடாது என்ற இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் கடும் கட்டுப்பாட்டையும் மீறி விஜய்சேதுபதி படத்தில் ரஜினி மற்றும் நவாசுதின் சித்திக் நடிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். Petta...Rajini, Vijay Sethupathi new look poste

வாரணாசி மற்றும் லக்னோ பகுதிகளில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அப்படத்தின் படப்பிடிப்பு ஸ்தல ஸ்டில்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன. அதைக்கண்டு எரிச்சடைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் படப்பிடிப்பு குழுவினர் தன் அனுமதி இல்லாமல் ஸ்டில்களை வெளியிடுவதோ, படம் குறித்த செய்திகளைப் பகிர்வதோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித் நடத்திவரும் கூகை நூலக விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி படப்பிடிப்பில் தான் ரஜினியுடன் நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டத,நவாசிதின் சித்திக் ஆகிய இருவரின் ஈடுபாட்டையும் சிலாகித்துப்பேசினார். “நவாசுதீன் சித்திக் நல்ல நடிகர். அவரை அருகில் இருந்து பார்த்தபோது வியந்தேன். ரஜினியும் வெளியில் பார்ப்பது போல் அல்ல. ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் அவர் மெனக்கெடுகிறார்.

 Petta...Rajini, Vijay Sethupathi new look poste

அவரை பக்கத்திலிருந்து பார்த்து நான் அதனை உணர்ந்தேன். நவாசுதீன் சித்திக் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடியவர். அவர் தனது இயல்புத் தன்மை திரைமொழியோடு தொடர்பு கொள்ளும் என்று நம்பக் கூடியவர். நான் நிறைய சொல்வதை விட, படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். விரைவில் திரைக்கு வரும்” என்று கூறினார்.

 Petta...Rajini, Vijay Sethupathi new look poste

விஜய்சேதுபதி ரஜினிக்கு அருகில் நிற்பதைப்பார்க்கும் போது படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பது பார்வையாளர்களைக் குழப்புவதற்கென்றே கார்த்திக் சுப்பாராஜ் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios