இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட'  திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படம் குறித்து அவ்வபோது ஸ்வாரஸ்ய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சசிகுமார் கதாபாத்திரம் பற்றிய தகவல்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இதில் சசிகுமாரின் பெயர் மாலிக் என குறிப்பிட்டுள்ளனர்.

Scroll to load tweet…

ஏற்கனவே இந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷாவின் கேரக்டர் 'சாரா' என்றும், விஜய் சேதுபதியின் கேரக்டர் 'ஜித்து' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், விரைவில் டீசரும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சமூகவலைதளத்தில் இந்தப் படம் குறித்து அடிக்கடி முக்கிய தகவலை வெளியிட்டு படக்குழுவினர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.