முன்னணி நடிகர்கள் பற்றிய எந்த தகவல் வெளியானாலும், அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக்கி விடுவார்கள். 

அதிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகும் பேட்ட, மற்றும் விசுவாசம் படம் பற்றிய அப்டேட் தகவல்கள் மற்றும் பாடல்கள் மூலம் சமூக ஊடங்கள்லே படு பிஸியாக இயங்கி கொண்டு இருக்கிறது என்றே கூறலாம். 

மேலும் ரஜினியின் பேட்ட பட பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக செம்ம ஹிட் ஆனது. அதே போல் நேற்று அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் ஒன்றும் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்போது 'பேட்ட' படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ள டீசர் ரஜினி ரசிகர்களை மற்றும் இன்றி அனைவரையும் கவர்ந்துள்ளது. மிகவும் இளமையாக, தன்னுடைய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இன்று 11 மணிக்கு வெளியான 'பேட்ட' டீஸர் ரிலீஸ் ஆன 5 நிமிடத்தில் இருந்தே தன்னுடைய சாதனையை துவங்கி விட்டது.  அதை தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.