சிரியாய் சிரிப்பவர்களுக்கு ’நீங்கள்லாம் மாறவே மாட்டீங்களாடா... போங்கடா’ என ரஜினி பதிலடி கொடுத்த புதிய ப்ரமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வசூலில் போட்டிபோட்டு வருகிறது. இந்நிலையில், இருவரது ரசிகர்களும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். வசூலில் நாங்க தான் டாப் என தத்தம் ஹீரோக்களை புகழ்ந்து வருகின்றனர். விஸ்வாசம் படம் தமிழகத்தில் வசூலில் முன்னிலையில் இருப்பதாகவும் இதன் மூலம் ரஜினியின் 27 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை விஸ்வாசம் அசைத்து பார்த்து விட்டதாக அஜித் ரசிகர்கள் புளங்காகிதப்பட்டு வருகின்றனர். பேட்ட பட ட்ரெய்லர் வெளியான பிறகு விஸ்வாசம் பட ட்ரெய்லர் வெளியானது. அதில் பேட்ட பட ட்ரெய்லருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஸ்வாசம் ட்ரெய்லர் வசனங்கள் அனல் கிளப்பின. 

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் படம் வெளியான 8 நாட்கள் கழித்து சன் பிக்சர்ஸ் பேட்ட படத்தின் ப்ரமோ வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு சிரிசிரி லொல் ப்ரமோ என பெயரிடப்பட்டுள்ளது. அதில், வில்லன்களான விஜய்சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என அனைவரும் தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்க கடைசியாக தோன்றும் ரஜினி, ’’டேய்... நீங்கள்லாம் மாறவே மாட்டீங்களாடா..? போங்கடா!’’ என்கிறார். 

 

இந்த வீடியோ அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.