நேற்று வெளியான ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் பாடல், ஒடிஸாவின் திருவிழாப் பாடல் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்பதில் துவங்கி, அப்பாடலும் அனிருத்தும் இன்று வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார்கள். அதே சமயம் பாடகர் எஸ்.பி.பியின் ரசிகர்கள் அனிருத் மீது காட்டமாக இருக்கிறார்கள்.

ரெகார்டிங்கில் முழு பாடலை எஸ்.பி.பி.யைப் பாடவைத்துவிட்டு, அவரை சீட்டிங் பண்ணும் விதமாக ஒரு காரியம் செய்திருக்கிறார் அனிருத். நேற்று வெளியான பாடலின் முதல் நான்கு வரிகளைத் தவிர்த்து, மீத வரிகள் இடம் பெற்றிருப்பது அனிருத்தின் குரலில். மலேசிய வாசுதேவனுக்கு அடுத்த படியாக ரஜினிக்கு ராசியான குரல் எஸ்.பி.பியினுடையது. ரஜினி-எஸ்.பி.பி காம்பினேஷன் பாடல்கள் அத்தனையும் ஹிட்டு தேன் சொட்டு ரகம்.

அதுவும் போக சமீபத்தில் அதிகம் பாடாத எஸ்.பி.பி.யின் குரலில் ரஜினி பாடலைக் கேட்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வமாய் இருக்க, ஆர்வக்கோளாறில் ரஜினியின் உறவினர் என்கிற ஒரே காரணத்துக்காக  பாடலின் 90 சதவிகிதத்தை தனது குரலால் ஆக்கிரமித்துக்கொண்ட அனிருத்துக்கு கண்டனங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.