ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழகம் எங்கும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாக திரண்டு மாணவர்கள் மற்றும்

இளைஞர்கள் நடத்திய போராட்டம் மத்திய ,மாநில அரசுகளை அசைத்துப் பார்த்தது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய்,சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்படும் நடிகர்களை பீட்டா தொடர்ந்து தாக்கி வருகிறது.

சூர்யா தான் நடித்து வரும் சிங்கம் 3 படத்தை விளம்பரப்படுத்தவே அவர்

ஜல்லிகிட்டக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என பீட்டா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தவறான செய்தி பரப்பியதற்கு மன்னிப்பு கோரும்படி

சூர்யா சார்பில் பிட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து பீட்டா அமைப்பு நடிகர் சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

நடிகர் சூர்யாவைப்பற்றி தவறான ஒரு செய்தியை பரப்பியதற்காக

முழு மனதோடு மன்னிப்பு கேட்கிறேன் என்று பீட்டா

அமைப்பின் நிர்வாகத் தலைவர் பூர்வா ஜோசிபூரா பதில் அனுப்பியுள்ளார்.